மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வார்டனுக்கு சாட்டையடி தீர்ப்பு

x

திருவண்ணாமலையில் பள்ளி மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், விடுதி காப்பாளருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

சேத்துப்பட்டு அருகே அன்பு இல்லம் என்ற விடுதியில், ஏராளமான பள்ளி மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். இவர்களில் 3 மாணவர்களுக்கு, விடுதியின் காப்பாளரான துரைபாண்டியன், பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இந்த வழக்கில், துரை பாண்டியனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு, அரசு சார்பில் நிதிஉதவி வழங்கவும், உத்தரவிடப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்