பள்ளியில் வசூலிக்கப்படும் கூடுதல் கட்டணம்.. பதில் அளிக்காத பள்ளி நிர்வாகம்.. சாலை மறியலில் இறங்கிய பெற்றோர்கள்

x

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக கூறி பெற்றோர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். செங்கம் போளூர் சாலையில் உள்ள அந்த தனியார் பள்ளியில் ஆண்டுக்கு 7ஆயிரம் ரூபாய் கல்வி கட்டணம் வசூலித்து வந்த நிலையில் இந்த ஆண்டு 25ஆயிரம் ரூபாய் வசூலிப்பதாக பெற்றோர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து பதில் அளிக்காத பள்ளி நிர்வாகத்தை கண்டித்து பெற்றோர்கள் பள்ளி எதிரே சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் குப்பநத்தம் - செங்கம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். சாலை மறியலால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்