அமைச்சர் செல்ல இருந்த விமானத்தில் திடீர் கோளாறு

x

சென்னையில் இருந்து மதுரை செல்ல இருந்த விமானம் திடீர் இயந்திரகோளாறு காரணமாக சுமார் ஐந்து மணி நேரம் தாமதமாக சென்றதால் பயணிகள் அவதியடைந்தனர். காலை 11.30 மணியளவில் மதுரைக்கு புறப்பட்ட விமானத்தில் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் உட்பட 142 பயணிகள் இருந்தனர். விமானம் புறப்படுவதற்கு முன் கோளாறு இருந்ததை கண்டறிந்த விமானி கட்டுப்பாட்டு அறைக்கு தகவலளித்தார். பழுதை சரிசெய்த பின் ஐந்தரை மணி நேரம் தாமதமாக 104 பயணிகளுடன் விமானம் புறப்பட்டு சென்றது.


Next Story

மேலும் செய்திகள்