வெள்ளத்தால் ஆலங்குளம் கால்வாயில் உடைப்பு.. 1000 ஏக்கர் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியது
தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இரு தினங்களாக கன மழை பெய்த நிலையில் பெரும்பாலான குளங்கள் நிரம்பியுள்ளன. ஆலங்குளம் கால்வாய் மானூர் கால்வாய் போன்ற நீர் நிலைகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் ஆலங்குளம் அருகே உள்ள துத்திகுளம் வழியாக செல்லும் மானூர் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டது. இந்த உடைப்பால் ஏராளமான தண்ணீர் வயல் நிலங்களுக்குள் புகுந்தது. இதில் சுமார் 1000 ஏக்கருக்கும் மேற்பட்ட நெல் மற்றும் வாழைப்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன. இதனால் விவசாயிகள் கடும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். மேலும் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்த நெல் பயிர் மற்றும் வாழை பயிருக்குறிய இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.
Next Story