சரியில்லாத நேரம்.. இளைஞரின் உயிரை குளத்தில் வைத்து பறித்த பரிகாரம்

x

திருவாரூர் மாவட்டம் திருவீழி மிழலை பகுதியில், நேரம் சரியில்லாததால் கோயில் குளத்தில் குளித்து பரிகாரம் செய்த 18 வயது இளைஞர், நீரில் மூழ்கி பலியானார். தேதியூரைச் சேர்ந்த சங்கர் கணேஷ், சென்னையில் வேதபாட சாலையில் பயின்று வந்தார். விடுமுறைக்கு சொந்த ஊர் சென்ற அவரை, நேரம் சரியில்லாததால் திருவீழிமிழலையில் உள்ள கோயில் குளத்தில் 10 நாட்கள் குளித்து வருமாறு ஒருவர் பரிகாரம் கூறியதாக தெரிகிறது. தொடர்ந்து 4 நாட்கள் கோயில் குளத்தில் குளித்து பரிகாரம் செய்து வந்த கணேஷ், இன்று தனது தாயுடன் குளிக்க சென்ற போது நீரில் மூழ்கியுள்ளார். அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்