திருமணமான ஓராண்டில் புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு - மனைவியை கண்டு பயத்தில் கணவனும்..

x

புதுக்கோட்டை அருகே, திருமணமாகி ஓராண்டில், குடும்பப் பிரச்சினை காரணமாக, தம்பதி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவரங்குளம் அருகே நிம்புநேஸ்வரம் கிராமத்தை சேர்ந்த பொற்பனையான் என்ற இளைஞருக்கும், பிரியங்கா என்ற இளம் பெண்ணுக்கும் இடையே, ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடந்தேறியது. மதுப்பழக்கம் கொண்ட பொற்பனையான், வீட்டில் உள்ள நகைகளை அடகு வைத்து மது குடித்து வந்ததால், தம்பதி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதில் விரக்தி அடைந்த மனைவி பிரியங்கா, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் வீட்டிற்கு வந்த பொற்பானையன், மனைவி தூக்கில் தொங்குவதைக் கண்டு, அச்சத்தில் அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து வந்த போலீசார், இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்