`அந்த' வீட்டில் மட்டும் 1000 டிகிரி ஃபாரன்ஹீட் எகிறிய வெப்பநிலை.. பஸ்பமான கணவன், மனைவி
அமெரிக்காவில் வீட்டில் ஒரு தம்பதி மர்மமான முறையில் இறந்து கிடந்த நிலையில், அவர்கள் வீட்டின் வெப்பநிலை ஆயிரம் டிகிரி ஃபாரன்ஹீட்டை எட்டியிருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது... தெற்கு கரோலினாவில் வசித்து வந்த 84 வயது ஜோன் லிட்டில்ஜான் மற்றும் 82 வயது க்ளென்வுட் ஃபவ்லர் ஆகியோரை நீண்ட நாட்களாக தொடர்பு கொள்ள முடியாததால் உறவினர்கள் போலீசில் புகாரளித்துள்ளனர்... போலீசார் நேரில் சென்று பார்த்த போது வீட்டில் இருவரும் சடலமாகக் கிடந்துள்ளனர். வீட்டின் வெப்ப நிலையை சோதித்த போது அது ஆயிரம் டிகிரி ஃபாரன்ஹீட் அதாவது 537 டிகிரி செல்சியஸ் அளவு இருந்துள்ளது... ஹீட்டர் தீப்பிடித்திருக்கலாம் என கருதப்பட்ட நிலையில், போலீசார் இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்...
Next Story