திடீரென நின்ற பைக்..உரிமையாளர் செய்த செயலால் சாம்பலான வண்டி

x

சிவகாசியில் நடு ரோட்டில் இருசக்கர வாகனம் திடீரென்று தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தனியார் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் பணிபுரியும் முனீஸ்வரன் என்பவர், பார்சலை ஏற்றிக் கொண்டு, செங்கமலநாச்சியார் புரத்திலிருந்து வரும் வழியில் பெட்ரோல் தீர்ந்து போனதால் வண்டி நின்றுள்ளது. பெட்ரோல் வாங்கி வந்து ஊற்றிவிட்டு, இருச்சகர வாகனத்தை இயக்க முற்பட்டபோது, திடீரென்று வாகனம் தீப்பிடித்து எரிந்துள்ளது. முனீஸ்வரன் தப்பி ஓடியதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. சம்பவம் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். இருப்பினும் இருசக்கர வாகனம் முழுவதுமாக எரிந்து சேதம் அடைந்தது.



Next Story

மேலும் செய்திகள்