நிலத்தை விற்றவர்களே ஆக்கிரமித்து அடாவடி..தட்டி கேட்ட விவசாயிக்கு அடி,உதை

x

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்துள்ள அனந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் விவசாயி மரியஜேம்ஸ். இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு, அதே பகுதியை சேர்ந்த முன்னாள் திமுக

கவுன்சிலர் சரவணன் என்பவரிடம் இருந்து 4 ஏக்கர் நிலத்தை 13 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளார். இதனிடையே, நிலத்தையும் விற்றுவிட்டு, அதில் 60 சென்ட் நிலத்தை சரவணன் ஆக்கிரமித்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக இரு தரப்பிற்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு, பாதிக்கப்பட்ட விவசாயி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் அந்தப் புகாரின் மீது போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில், சரவணன் பத்துக்கும் மேற்பட்ட ஆட்களுடன் வந்து, மரியஜேம்ஸ் மற்றும் அவரது குடும்பத்தினரை கடுமையான தாக்கியது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகின. இதனிடையே, இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பரஸ்பரம் அளித்த புகாரின் அடிப்படையில், இரு தரப்பினர் மீதும் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்