ஊராட்சி மன்றத் தலைவரை சுத்து போட்ட மக்கள்-திடீர் என்ட்ரி கொடுத்த கலெக்டர்
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே மேல்நிலை குடிநீர்த் தேக்கத் தொட்டியை 6 மாதங்களாக சுத்தம் செய்யவில்லை எனக் கூறி ஊராட்சி மன்றத் தலைவரை முற்றுகையிட்டு கிராம மக்கள் வாக்குவாதம் செய்தனர். வளையாம்பட்டு அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் திருப்பதியை முற்றுகையிட்டு, தங்கள் பகுதிக்கு ஏன் வரவேயில்லை என்று கேள்வி எழுப்பினர். அப்போது அங்கு வந்த மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், பொதுமக்களின் குற்றச்சாட்டுகளை முழுமையாக கேட்டு விரைவில் அதற்கான நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
Next Story