என்எல்சி விவகாரம்...அண்ணாமலை ஆவேசம்
என்எல்சி விவகாரத்தில் தமிழக அரசின் போக்கை கண்டித்து, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், ஜேசிபி இயந்திரங்கள் மூலம் அத்துமீறி, பயிரிடப்பட்டுள்ள நிலங்களை பாழ்படுத்துவதாக விவசாயிகள் கூறுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், நெய்வேலி என்எல்சி நிறுவனத் தலைவர் பிரசன்னகுமாரிடம் இது குறித்து தொலைபேசி வாயிலாக பேசியதாகவும், விவசாயிகள் பாதிக்கப்படாதவாறு தீர்வு காண வலியுறுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Next Story