"மச்சானும் மருமகனும் தான் காரணம்"-விபரீத முடிவு எடுத்த ஆட்டோ டிரைவரின் கடைசி வீடியோ

x

தென்காசி மாவட்டம் சங்கரன் கோயில் அருகே, ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தன்னை ஆட்டோவுடன் சேர்ந்து தீயிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், தற்கொலைக்கு முன் அவர் பேசி வீடியோ வெளியாகியுள்ளது.

சங்கரன்கோயில் அருகே மலையடிக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் வெள்ளைத்துரை. ஆட்டோ ஓட்டுநர் இவர், குடும்பத்தை விட்டு பிரிந்து தனியே வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கீழ சிந்தாமணி அருகே ஆட்டோ ஒன்று தீ வைக்கப்பட்டு இருப்பதாகவும், அதனுள் ஓட்டுநர் உடல் கருகி உயிரிழந்து கிடப்பதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அங்கு உடல் கருகி உயிரிழந்து கிடந்தது வெள்ளைத்துரை என்பதை உறுதிசெய்தனர். விசாரணையில், வெள்ளைத்துரை தற்கொலை செய்து கொண்டது தெரியவர, தனது தற்கொலைக்கு தங்கையின் கணவர் மற்றும் அவரின் மகன்தான் காரணம் என தற்கொலைக்கு முன்பாக வெள்ளைத்துரை பேசி வெளியிட்ட வீடியோ இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story

மேலும் செய்திகள்