திசையன்விளை இளைஞர் கொலை விவகாரம்.. திடீரென திரண்ட CPI கட்சியினர்.. உச்சகட்ட பரபரப்பு

x

காதல் விவகாரத்தில் இளைஞர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், வழக்கை திசைதிருப்பும் காவல்துறையை கண்டித்து நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் அருகே போராட்டம் நடைபெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

திசையன்விளை அப்புவிளை சுவாமிதாஸ் நகரை சேர்ந்த முத்தையா என்ற இளைஞர், வேற்று சமூகத்தை சேர்ந்த இளம்பெண்ணை காதலித்து வந்த நிலையில், காரம்பாடு ஓடை பகுதியில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். முத்தையா ஆணவக் கொலை செய்யப்பட்டதாக உறவினர்கள் தெரிவித்த நிலையில், நண்பர்களுடன் ஏற்பட்ட தகராறில், முத்தையா கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டதாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பாக மதியழகன், சுரேஷ் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் வழக்கை போலீசார் திசைதிருப்புவதாகக் கூறி, உறவினர்கள் உடலை வாங்க மறுத்து தொடர் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தனர். இந்த நிலையில், நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் முன்பு, மாவட்ட காவல்துறையை கண்டித்து, உயிரிழந்த முத்தையா குடும்பத்தினர், ஊர் பொதுமக்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் உள்ளிட்ட அனைத்து கட்சி கூட்டமைப்பினர் ஒன்று திரண்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்