சென்னையில் சுற்றித்திரிந்த மாடுகளை பிடிக்க சென்றவர்களுக்கு நேர்ந்த கதி
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில், ஏபிஆர் நிதி நிறுவனத்திற்கு சொந்தமான பல்பொருள் அங்காடியை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். தீபாவளி சீட்டு கட்டியவர்களுக்கு, பரிசு பொருட்கள் கொடுக்காமல் கடையை காலி செய்வதாக தகவல் பரவியதை அடுத்து, கடையின் முன் மக்கள் திரண்டனர். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார், மக்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர், அங்கு தயார்நிலையில் இருந்த வாகனங்களை பறிமுதல் செய்து, காவல்நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
சென்னை திருவல்லிக்கேணியில் மாடு பிடிக்க சென்ற மாநகராட்சி ஊழியர்களை மாட்டின் உரிமையாளர்கள் தாக்க முயன்றதாக புகார் எழுந்துள்ளது.
சென்னையில் பராமரிப்பின்றி சாலையில் சுற்றி திரியும் மாடுகளை பிடிக்க மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி, திருவல்லிக்கேணி பகுதியில் மாடுகளை பிடிக்க சென்ற போது மாட்டின் உரிமையாளர்கள் தாக்க முற்பட்டதாக காவல் துறையில் மாநகராட்சி ஊழியர்கள் புகார் அளித்துள்ளனர். இதனை பதிவு செய்த போலீசார், இனி மாடு பிடிக்க செல்லும் போது தகவல் தெரிவித்தால், பாதுகாப்புக்கு போலீசாரை அனுப்பி வைப்போம் என தெரிவித்துள்ளனர்.