"சாரே... கொல மாஸ்.." வெள்ளத்தில் நீந்தி மாடுகளின் உயிரை காப்பாற்றிய விவசாயி

x

ஆற்றின் நடுவே சிக்கித் தவித்த மாடுகளை விவசாயி ஒருவர் காப்பாற்றியுள்ளார். கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே கஞ்சங்கொல்லை கிராமத்தின் வழியாக செல்லும் கொள்ளிடம் ஆற்றின் மணல் திட்டு புல்வெளியில் 4 மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. அப்போது, திடீரென கொள்ளிடம் ஆற்றில் நீர் வரத்து அதிகரித்ததால், மாடுகள் கரைக்கு திரும்ப முடியாமல் தவித்தன. இந்நிலையில், வெற்றிவேல் என்ற விவசாயி, துணிச்சலாக செயல்பட்டு, ஆற்று வெள்ளத்தில் நீந்திச் சென்று மாடுகளை கரைக்கு ஓட்டி வந்தார். இதையடுத்து மாட்டின் உரிமையாளர் மற்றும் அப்பகுதியினர் விவசாயிக்கு தங்கள் பாராட்டை தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்