நாட்டு வெடிகுண்டு வீசிய பிரபல ரவுடி..! பழிவாங்க சிறைக்குள் இயங்கிய கும்பல்..அதிரடி காட்டிய பாண்டி போலீஸ்... நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
புதுச்சேரியில் கடந்த 2012-ஆம் ஆண்டு, மிரட்டி பணம் பறித்த வழக்கில் கைது செய்யப்பட்ட தேங்காய்திட்டு ஜெகன் என்பவரை, பிரபல ரவுடி மர்டர் மணிகண்டனின் ஆட்கள், நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்தனர். இந்த கொலைக்கு பழிவாங்கும் விதமாக சிறையில் உள்ள மணிகண்டனை கொலை செய்ய ஜெகனின் ஆதரவாளர்கள் திட்டமிட்டனர். அதன்படி, ஏனாம் சிறையின் 25 அடி உயர சுவரின் மீது ஏறி குதித்த கும்பல், சிறைக்குள் இறங்கி வார்டன் சேகரின் கை, கால்களை கட்டிப் போட்டு விட்டு, மணிகண்டனின் இருப்பிடத்தை தேடினர். இதை கவனித்த மற்றொரு வார்டன் செல்வம், கூச்சலிட்டதால் அந்த கும்பல் தப்பி ஓடியது. இதையடுத்து ஏனாம் போலீசார், 15 பேரை கைது செய்து, சிறையில் அடைத்தனர். கடந்த 10 ஆண்டுகளாக புதுச்சேரி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், 12 பேருக்கு தலா 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்