காதை கிழிக்கும் ஹாரன் சத்தம்.. டயருக்கு அடியில் சமாதி கட்டிய ஆர்.டி.ஓ..! கெத்து காட்டிய சிங்க பெண்
ராசிபுரத்தில் அரசு பேருந்து மற்றும் தனியார் பேருந்துகளில் பொறுத்தப்பட்டு இருந்த அதிக ஒலி எழுப்பும் ஹாரன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ராசிபுரம் புதியபேருந்து நிலையத்தில் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் நித்யா தலைமையிலான அதிகாரிகள் 2வது நாளாக ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அரசுபேருந்து மற்றும் தனியார் பேருந்துகளில் இருந்த அதிக ஒலி எழுப்பும் ஹாரன்களை அகற்றப்பட்டது. மீண்டும் இது போன்ற ஹாரன்களை பயன்படுத்தினால் ஓட்டுனரின் உரிமை பறிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்த வட்டார போக்குவரத்து ஆய்வாளர் நித்யா , பறிமுதல் செய்யப்பட்ட ஹாரன்களை பேருந்து சக்கரத்தின் கீழே வைத்து நசுக்க வைத்தார்
Next Story