மருத்துவமனை ஊழியர் கைகள் கட்டப்பட்டுவீட்டிற்குள் சடலமாக கிடந்த கொடூரம் - அரங்கேறிய கொலை
பென்னாகரம் இந்திரா நகரை சேர்ந்தவர் சுமதி. இவருக்கு குணசேகரன் என்பவருடன் திருமணமாகி 2 மகன்கள் உள்ள நிலையில், மகன்கள் இருவரும் ஓசூரில் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். இதனிடையே, கடந்த 10 வருடத்திற்கு முன்பே கணவரை பிரிந்து தனியே வசித்து வந்த சுமதி, பென்னாகரம் அரசு மருத்துவமனையின் காசநோய் பிரிவில் உதவியாளராக பணியாற்றி வந்துள்ளார். சம்பவத்தன்று, சுமதியின் வீடு நீண்ட நேரமாகியும் திறக்காததால், சந்தேகமடைந்த உறவினர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளனர். அப்போது, கைகள் கட்டப்பட்ட நிலையில், சுமதி கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பெண்ணின் சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், இதன் பின்னணி குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்
Next Story