ரயிலை கவுக்க முயன்ற விஷமிகள்.. நூலிழையில் அசம்பாவிதம் தவிர்ப்பு.. ஹீரோவாக மாறிய ஸ்டேஷன் மாஸ்டர்
ராணிப்பேட்டை மாவட்டம் முகுந்தராயபுரம் அருகே சென்னை-பெங்களூரு ரயில்வே தடத்தில் இரு பாதைகளுக்கு இடையே இரும்பு ராடை வைத்து விட்டு, மர்ம நபர்கள் தப்பியோடிய நிலையில், சிக்னல் துண்டிக்கப்பட்டதை உரிய நேரத்தில் ஸ்டேஷன் மாஸ்டர் கவனித்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. அவர் அளித்த தகவலின் பேரில், மோப்ப நாயுடன் போலீசார் மேற்கொண்ட சோதனையில் தண்டவாளத்தில் இரும்பு ராடு மற்றும் கற்கள் இருந்தது தெரிய வந்தது. இந்த செயலில் ஈடுபட்டவர்கள் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Next Story