அரை நிர்வாண கோலத்தில் அப்படியே தூக்கிய காவல்துறை... திருநெல்வேலியில் பரபரப்பு

x

திருநெல்வேலி மாவட்டம் நான்குநேரி பகுதியில் உள்ள, சடையநேரி குளத்தில் மணல் திருடிய சம்பவத்தில் திமுக பிரமுகரான கங்கை ஆதித்தன் என்பவரை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில், அவர் நீதிமன்றத்தில் முன் ஜாமினுக்கு முயற்சித்தார். முன் ஜாமின் கிடைக்காத நிலையில், தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் உள்ள கங்கை ஆதித்தனை அவரது வீட்டில் வைத்து கைது செய்யச் சென்றனர். அப்போது கங்கை ஆதித்தனின் மனைவி தங்களது குழந்தைகளை வைத்து போலீசாரை தடுக்க முயற்சித்தார். மேலும், தாங்கள் சார்ந்த சமூகத்தை குறிப்பிட்டு போலீசார் திட்டியதாகவும், போலீசாருக்கு மணல் திருட்டில் பங்கிருப்பதாகவும் காங்கை ஆதித்தனின் மனைவி அவதூரு பரபரப்ப முயற்சித்தார். பின்னர் 6 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் அரை நிர்வாண கோலத்தில் இருந்த திமுக பிரமுகரை போலீசார் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்