"கோவையில் சிவன் கோவில் இடிக்க முயற்சி" - புதிய மேயர் மீது பரபரப்பு புகார்
கமிஷனுக்காக கோயிலை இடிப்பதற்கு, கோவையின் புதிய மேயர் முயற்சிப்பதாக, பாஜகவினர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர். பாஜக மாநில தொழில் பிரிவு துணைத் தலைவர் செல்வக்குமார், ஊர் பொதுமக்கள் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோவை கோல்ட் விங்ஸ் பகுதியில் இயங்கி வரும் தனியார் லாட்ஜை விற்பனை செய்வதற்காக அங்குள்ள சிவன் கோவிலை, கோவை மாநகராட்சி மேயர் இடிக்க முயற்சிப்பதாக கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், பொதுமக்களை திரட்டி பாஜக போராட்டம் நடத்தும் எனவும் தெரிவித்தார்.
Next Story