சென்னையில் தண்ணீர் பஞ்சம்? வெளிவந்த முக்கிய தகவல்
மேட்டூர் அணையில் திறக்கப்படும் நீர், காவிரி ஆறு வழியாக கல்லணையில் உள்ள, கீழணைக்கு வருகின்றது. அங்கிருந்து வடவாறு வழியாக கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் உள்ள வீராணம் ஏரியில் தேக்கப்படுகின்றது. இங்கிருந்து சென்னை மக்களின் குடி நீர் தேவைக்கு தண்ணீர் அனுப்ப படுகின்றது. கடந்த ஜனவரி மாதம் சரியான மழை பொழிவு இல்லாமல் போனது, கடும் வெப்பம் காரணமாக வீராணம் ஏரிக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. ஏரியின் நீர் மட்டம் 40.25 கன அடியாக உள்ள நிலையில், சென்னை மெட்ரோ குடிநீருக்கு 46 கன அடி மட்டுமே தண்ணீர் அனுப்பப்படுகின்றது. இதனால் அடுத்த ஓரிரு நாட்களில் சென்னைக்கு குடிநீர் அனுப்புவதில் சிக்கல் ஏற்படும் சூழல் உருவாகும் என தெரிகிறது.
Next Story