வெளியான பரபரப்பு வீடியோ - பிரபல இயக்குநர் சகோதரர் மீது புகார்
சென்னை மணலி புதுநகரை சேர்ந்த ரிஷி என்பவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியில் நிலம் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அந்த நிலத்தை பூர்வீக சொத்து எனக்கூறி ரிஷியின் அத்தை மகளான சகிலா உரிமை கொண்டாடியதால், இது குறித்து ரிஷி போலீசில் புகாரளித்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த சகிலா, திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித்தின் சகோதரரும், வழக்கறிஞருமான பிரபு மற்றும் அவருடைய ஆதரவாளர்களுடன் சேர்ந்து சம்பந்தப்பட்ட இடத்திற்குள் நுழைந்து தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இந்த தகராறில், இயக்குநர் பா.ரஞ்சித்தின் சகோதரரான பிரபு அங்கு கூடியிருந்தவர்களை தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டல் விடுக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story