அதிகாலை தூங்கிய சிறுமி கடத்தல் - கண்கள் கழுத்தில் காயம் - 500 மீட்டர் தூரத்தில்...
கேரளாவில்10 வயது சிறுமி கடத்தி கம்மல் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காசர்கோடு பகுதியில் அதிகாலை வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த சிறுமியை கடத்திச் சென்ற நபர், சிறுமி அணிந்திருந்த கம்மலை திருடிவிட்டு அவரை 500 மீட்டர் தூரத்தில் தனியாக விட்டுச் சென்றார். இதில், சிறுமியின் கண்கள் மற்றும் கழுத்தில் காயம் இருந்ததால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக சம்பவ இடத்தில் கைரேகை நிபுணர்களை கொண்டு ஆய்வு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Next Story