மசாலா பொருட்களில் பூச்சிக்கொல்லியா? - இந்திய உணவு பாதுகாப்பு ஆணையம் முக்கிய தகவல்
மசாலா பொருட்களில் பூச்சிக்கொல்லியா? - இந்திய உணவு பாதுகாப்பு ஆணையம் முக்கிய தகவல்
மூலிகை மற்றும் மசாலா பொருட்களில் உள்ள பூச்சிக்கொல்லி அளவை, 10 மடங்கு வரை அதிகரித்துக் கொள்ள, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகின. இந்நிலையில் அத்தகைய அறிக்கைகள் தவறானவை உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் அதிகபட்ச அளவு எவ்வளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளதோ, அதைத்தான் இந்தியாவும் பின்பற்றுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மசாலா பொருட்கள் சிலவற்றில் அளவுக்கு அதிகமாக, எத்திலீன் ஆக்சைடு பூச்சிக்கொல்லி மருந்து அதிகமாக இருப்பதாக கூறி, அவற்றின் இறக்குமதிக்கு வெளிநாடுகள் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது
Next Story