அதிகாரத்தை கையில் எடுத்து கொண்ட கவுன்சிலரின் கணவர் - வெளியான பரபரப்பு வீடியோ
கன்னியாகுமரி மாவட்டம், கொல்லங்கோடு அருகே வழக்கறிஞரை கவுன்சிலரின் கணவர் தாக்க முயன்றதாக புகாரளிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை பெய்து வரும் நிலையில், மஞ்சதோப்பு பகுதியில் தார் சாலை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மழை பெய்யும் நேரத்தில் சாலை அமைத்தால் தரமானதாக இருக்குமா என கிளீட்டஸ் என்ற வழக்கறிஞர் கேள்வி எழுப்பியுள்ளார். அப்போது, ஸ்டீஃபன் என்ற நபர் தன்னை கவுன்சிலர் எனக் கூறி கிளீட்டஸை தாக்க முயன்றுள்ளார். இது குறித்து போலீசில் புகாரளிக்கப்பட்டுள்ள நிலையில், தாக்க முயன்ற நபர் கவுன்சிலரின் கணவர் எனத் தெரிய வந்துள்ளது. மேலும், சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.
Next Story