தாயுடன் வசித்த 8 வயது சிறுமியை - எதேச்சையாக டெஸ்ட் செய்த டாக்டர் - ஆடிப்போக வைத்த பாலியல் ரிப்போர்ட்

x

விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் நடந்துள்ளதாக தந்தை புகார் அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விருதுநகரில் பட்டாசு தொழில் செய்துவந்த தம்பதி இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு தனித்தனியாக வசித்த நிலையில், அவர்களுடைய 8 வயது பெண் குழந்தை தாயுடன் வசித்து வந்துள்ளது. மகளை பார்க்க சென்றபோது குழந்தை உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளார். மருத்துவமனையில் சேர்த்தபோது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்ததால் தந்தை அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து போலீசில் தந்தை புகார் அளித்துள்ளார். தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக குழந்தை மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் போலீசார் தொடர்ந்து விசாரண நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்