கடலில் மாயமான மச்சான்..! அக்காவின் நிலை... மாப்பிளை எடுத்த விபரீத முடிவு... அதிர்ந்த ஊரார்

x

பட்டுக்கோட்டை அருகே கடலில் படகு கவிழ்ந்து மாயாமானவரின் நிலை தெரியாததால் அவருடைய மைத்துனர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மல்லிப்பட்டினம் நொண்டிதோப்பு பகுதியை சேர்ந்த அந்தோணி உள்பட நான்கு மீனவர்கள் சென்ற நாட்டுப்படகு கடந்த ஞாயிற்றுக்கிழமை கடலில் கவிழ்ந்தது. இதில், 3 பேர் மீட்கப்பட்டநிலையில் அந்தோணியை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் அந்தோணியின் மனைவியான தனது அக்கா குழந்தைகளுடன் செய்வதறியாமல் திகைப்பதை பார்த்து வேதனை அடைந்த வேதேஷ்வரன் என்ற இளைஞர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் மேலும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்