"எனக்கு அரசியலே வேணாம்.." - அழுகையை அடக்க முடியாமல் நெஞ்சில் அடித்து பெண் சேர்மன் கதறல்

x

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் தனக்கு அரசியலே வேண்டாம் என்று கூறி, நகர மன்ற தலைவி கண்கலங்கினார். செங்கோட்டை நகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள மின் மயானத்தின் பராமரிப்பை தொண்டு நிறுவனத்திடம் ஒப்படைப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் 20 கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். ஏராளமான கவுன்சிலர்கள் நகர மன்ற தலைவி ராமலஷ்மியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், தனக்கு அரசியலே வேண்டாம் எனக்கூறி அவர் கண் கலங்கினார்.


Next Story

மேலும் செய்திகள்