"காப்பாத்துங்கள் ஐயா.." - கைகளை கூப்பி அதிகாரிகளிடம் மனு கொடுத்த மினி பேருந்து உரிமையாளர்கள்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், போக்குவரத்து முதன்மை செயலாளார் சுன்சோங்கம் ஜடச்சிரு ஆய்வு மேற்கொண்டார். அப்போது மினி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர், தங்களுடைய வாழ்வாதரத்தை காப்பற்ற வேண்டும் ஐயா என கூறி, கைகளை கூப்பி, அவரிடம் மனு அளித்தனர். வழக்கமான வழித்தடத்தில் பத்து கிலோ மீட்டர் தூரம் நீட்டித்து தர கோரினர். அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து நடவடிக்கை எடுப்பதாக போக்குவரத்து முதன்மை செயலாளார் அவர்களிடம் தெரிவித்தார்.
Next Story