நகராட்சியை கையில் எடுத்துக்கொண்ட பிளம்பர்.. கோபமான ஆணையர்.. பயன்பெற்றவர்களுக்கும் பனிஷ்மென்ட்

x

தென்காசி நகராட்சியில் குடியிருப்புகளுக்கு முறைகேடாக குடிநீர் இணைப்பு கொடுக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து விசாரிக்கப்பட்டதில், நகராட்சியில் பிளம்பராக பணிபுரிந்த மணிவண்ணன், ஆணையர், பொறியாளர் அனுமதியில்லாமல், குடிநீர் இணைப்பு கட்டணம் செலுத்தாதவர்கள் வீடுகளுக்கு இணைப்பு வழங்கியது உறுதி செய்யப்பட்டது. அவரை இடைநீக்கம் செய்த ஆணையர், விதிமுறை மீறி குடிநீர் இணைப்பு பெற்று குடியிருப்புகளுக்கு 6 ஆண்டுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட மாட்டாது என அதிரடியாக உத்தரவிட்டார். மணிவண்ணன் மீது போலீசிலும் புகார்களிக்கப்பட்டுள்ளது


Next Story

மேலும் செய்திகள்