உறுதி செய்த கோர்ட்...உடனே கலெக்டர் போட்ட உத்தரவு - தூக்கி வீசப்பட்ட தலைவர்

x

தென்காசி மாவட்டம், ஆவுடையானூர் ஊராட்சி மன்றத் தலைவர் பல்வேறு முறைகேட்டில் ஈடுபட்டார் என்பதை நீதிமன்றம் உறுதிசெய்ததால், அவரை மாவட்ட ஆட்சியர் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக வார்டு உறுப்பினர்களும், சமூக ஆர்வலர்களும் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்ததுடன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு, ஊராட்சி மன்றத் தலைவர் குத்தாலிங்கராஜன் என்கிற கோபி முறைகேடு செய்ததை உறுதிப்படுத்தியது. இதையடுத்து, நீதிமன்ற உத்தரவின்பேரில், அவரை தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தகுதி நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்