கோயில் வழிபாடு...கோட்டாட்சியர் வாக்குறுதி...
விழுப்புரம் அருகே கோயிலில் ஒரு தரப்பினர் வழிபாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோட்டாட்சியர் உறுதியளித்துள்ளார்.
விழுப்புரம் அருகே மேல்பாதி கிராமத்தில் உள்ள தர்மராஜா, திரவுபதியம்மன் கோயிலில் வழிபாடு நடத்த ஒரு தரப்பினருக்கு மற்றொரு தரப்பினர் அனுமதி மறுத்தனர். இப்பிரச்சினை தொடர்பாக 9 கட்டங்களாக சமரச பேச்சுவார்த்தை நடத்தியும் சுமூக உடன்பாடு ஏற்படவில்லை. கடந்த ஜூன் கோயில் பூட்டி சீல் வைக்கப்பட்டது . இந்நிலையில் இரு தரப்பினரையும் தனித்தனியாக அழைத்து கோட்டாட்சியர் பிரவீனாகுமாரி பல கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தினார். இரு தரப்பினரும் ஒற்றுமையாகவும், அமைதியுடனும் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நடத்தி வருவதாகவும் சுதொடர்ந்து பேச்சுவார்த்தை மூக தீர்வு ஏற்படும் என நம்புவதாகவும் கோட்டாட்சியர் தெரிவித்தார். வரும் 15 நாட்களுக்குள் ஒரு தரப்பினரை கோவிலுக்குள் அழைத்து சென்று வழிபாடு நடத்துவது தொடர்பாக நல்ல முடிவு எட்டப்படும் என்றும் கோட்டாட்சியர் தெரிவித்தார்.