வேலை போன சோகத்தில் எலி மருந்து சாப்பிட்ட.. டாஸ்மாக் சுமைதூக்கும் தொழிலாளி

x

வேலை போன சோகத்தில் எலி மருந்து சாப்பிட்ட.. டாஸ்மாக் சுமைதூக்கும் தொழிலாளி

திருவாரூரில் வேலை பறிபோனதால் மனமுடைந்த டாஸ்மாக் சுமைதூக்கும் தொழிலாளர், எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலை முயன்றார்.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் குடோனில், கடந்த 17 ஆண்டுகளாக நூற்றுக்கும் மேற்பட்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர்.

அவர்களுக்குப் பதிலாக புதிதாக சுமைத் தூக்கும் தொழிலாளர்களை நியமிக்க முயற்சிகள் நடப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அந்த குடோனில் வேலை செய்து வந்த விளமல் பகுதியைச் சேர்ந்த கிரி என்பவருக்கு வேலை போனதால், மனமுடைந்து எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.

அவரை குடும்பத்தினர் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்