அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்ட கடை - முந்தி அடித்து முற்றுகையிட்ட முதலீட்டாளர்கள் - வெளியான பின்னணி

x

பள்ளப்பட்டியில் செயல்பட்டு வரும் தனியார் நிதி நிறுவனம், ஒரு சவரன் தங்கத்தை முதலீடு செய்தால், அதற்கு மாதந்தோறும் 2 ஆயிரம் ரூபாய் பங்கு தொகை வழங்குவதாக அறிவித்தது. இதனையடுத்து, சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் 120 பேர் ஆயிரத்து 50 சவரன் தங்கத்தை அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தனர். மாதந்தோறும் 2 ஆயிரம் ரூபாய் பங்குத் தொகை வழங்கப்பட்ட நிலையில், கடந்த 4 மாதங்களாக அந்த தொகை வழங்கப்படவில்லை என தெரிகிறது. இதுகுறித்து வாடிக்கையாளர்கள் முறையிட்டபோது, 10 நாட்களுக்குள் உரிய தீர்வு காண்பதாக அந்நிறுவனத்தின் தலைமை அலுவலக ஊழியர்கள் கூறியதாக தெரிகிறது. இதனிடையே, பொதுமக்கள் தங்களை பணி செய்ய விடாமல் தடுப்பதாகவும், போலீசார் உரிய பாதுகாப்பு வழங்க உத்தரவிட கோரியும், மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் நிதி நிறுவனம் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதுகுறித்து காவல்துறை பதிலளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இன்று அதிகாலை 5 மணியளவில் நிதி நிறுவனம் திறக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானதை அடுத்து, அங்கு திரண்ட முதலீட்டாளர்கள், ஊழியர்களை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்....


Next Story

மேலும் செய்திகள்