கடனைத் திருப்பித் தராததால் விரக்தி-தற்கொலை
பணம் வாங்கியவர்கள் திருப்பிக் கொடுக்காத விரக்தியில் வீடியோ வெளியிட்டு ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பொள்ளாச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...
ஆனைமலை கெங்கம்பாளையம், தாத்தையான் கோவில் வீதியை சேர்ந்த சக்திகுமார் ஒப்பந்ததாரராக இருந்தார்... இவர் கணேசமூர்த்தி, சாதிக் பாஷா, செந்தில்நாதன் ஆகிய மூவருக்கும் மொத்தம் 12லட்சத்து 30ஆயிரம் ரூபாய் கடன் கொடுத்திருப்பதாகவும், மூவரும் பணத்தைக் கேட்டும் திருப்பித் தராததால் தற்கொலை செய்து கொள்வதாகக் கூறி வாட்சப்பில் வீடியோ வெளியிட்டு பொள்ளாச்சி அருகே கோட்டாம்பட்டியில் உள்ள தனது மாமனார் வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இறந்து போன சக்தி குமாருக்கு திருமணமாகி 2 பிள்ளைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story