அடுத்தடுத்து நிகழும் பட்டாசு ஆலை வெடி விபத்துகள்.. அதிகாரிகள் அதிரடி சோதனை
மயிலாடுதுறை அருகே வெடி தயாரிப்பு கிடங்குகளில், வருவாய்த்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். மயிலாடுதுறை மாவட்டம் தில்லையாடி வெடிக்கிடங்கில் ஏற்பட்ட விபத்தில், 4 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். இதன் எதிரொலியாக, திருவாலங்காட்டில் உள்ள நாட்டுவெடி மற்றும் வானவெடி தயாரிப்புக் கிடங்குகளில், மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையிலான அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது வாடிக்கையாளர்கள் தேவைக்கு அதிகமான பட்டாசுகளை வாங்கினால், உடனடியாக போலீசாருக்கு தகவல் அளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
Next Story