கல்லூரி விடுதியில் மாணவர் விபரீத முடிவு - விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே, தனியார் பொறியியல் கல்லூரியில் மாணவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டையில் தனியார் செயல்பட்டு வரும் பொறியியல் கல்லூரியில், ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்த சந்திரசேகர் என்பவர் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி வளாகத்தில் தங்கி இருந்த அறையில், மாணவர் சந்திரசேகர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தகவலின் பேரில் வந்த போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தேர்வில் அரியர்ஸ் இருந்ததால், மாணவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்துள்ள நிலையில், போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story