"வீட்டுப்பாடம் செய்யாத மாணவனை அடித்து துவைத்த ஆசிரியை.." - பெற்றோர் போலீஸ்க்கு வைத்த கோரிக்கை
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே வீட்டுப்பாடம் செய்யாத பள்ளி மாணவனை அடித்து, கிள்ளி வைத்த ஆசிரியை மீது பெற்றோர் போலீசில் புகார் செய்துள்ளனர்.
வாலிசெட்டிபட்டியை சேர்ந்த மாயவன் என்பவரது மகன் கவுதம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறான். உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கவுதம் வீட்டுப்பாடம் செய்யாமல் பள்ளிக்குச் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பள்ளி ஆசிரியை சாந்தி என்பவர் கவுதமை பிரம்பால் அடித்து, நகத்தால் கிள்ளி வைத்துள்ளார். மாலை வீடு சென்ற மாணவனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. பெற்றோர் விசாரித்த போது, ஆசிரியை அடித்து கிள்ளி வைத்ததை கூறியுள்ளான். பின்னர் பெற்றோர் சிறுவனுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். மேலும் பள்ளி ஆசிரியை சாந்தி மீது, வடமதுரை போலீசாரிடம் பெற்றோர் மற்றும் உறவினர்கள் புகார் அளித்துள்ளனர்.