நல்லூர் கந்தசாமி கோயில் தேர்த் திருவிழா... யாழ்பாணத்தில் குவிந்த பக்தர்கள்
இலங்கை யாழ்பாணத்தில் அமைந்துள்ள, நல்லூர் கந்தசாமி கோயிலின் தேர்த் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. மூல மூர்த்திக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்ற நிலையில், வசந்தமண்டப பூஜைகள் இடம்பெற்று முருகப் பெருமான் தேரில் உலாவந்து பக்தர்களுக்கு தரிசனம் தந்தார். நூற்றுகணக்கான பக்தர்கள், காவடி எடுத்தும், கற்பூர சட்டிகள் ஏந்தியும், அங்கப்பிரதட்சணம் செய்தும் தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றினர்.
Next Story