12 மீனவர்களுக்கு தலா ரூ.56 லட்சம் அபராதம்

x

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 12 பேருக்கு தலா 56 லட்ச ரூபாய் அபராதம் விதித்து, இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடியில் இருந்து 2 விசைப்படகுகளில் சென்ற 22 தமிழக மீனவர்களை, எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படை ஆகஸ்ட் 5-ஆம் தேதி சிறைப்பிடித்தது. அவர்களில் 12 பேருக்கு தலா 56 லட்ச ரூபாய் அபராதம் விதித்து புத்தளம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அபராதத்தை செலுத்த தவறினால், 6 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மற்ற மீனவர்கள் 10 பேரையும், வரும் 10-ஆம் தேதி வரை சிறையில் வைக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்