விபத்தில் உயிரிழந்த மகனின் பிறந்தநாள் - நெஞ்சில் குடி இருந்த பல நாள் வேதனை - கனத்த நெஞ்சோடு தந்தை செய்த சேவை

x

மதுரை மாநகரின் 58 வது வார்டு திமுக கவுன்சிலர் ஜெயராமன். இவரது மகன் வசந்த், இரண்டு வருடங்களுக்கு முன்பு இருசக்கர வாகன விபத்தில் உயிரிழந்தார். இந்தநிலையில் கவுன்சிலர் ஜெயராமன், தனது மகன் வசந்த்தின் பிறந்தநாளையொட்டி, 10 ஆயிரம் ஏழை, எளிய மக்களுக்கு போர்வைகளை வழங்கியுள்ளார். மதுரை மேல பொன்னகரத்திலுள்ள பள்ளியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, அமைச்சர் மூர்த்தி தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் பேசிய ஜெயராமன், தனது மகன் விபத்தில் அடிபட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் போது, தானும் தனது மனைவியும் போர்வை இல்லாமல் தரையில் உறங்கியதை மறக்க முடியாது எனவும், ஏழை எளிய மக்களுக்கு இந்த உதவி கண்டிப்பாக பயன்படும் எனவும் உருக்கமாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்