சாலையில் குழந்தையை விட்டுச்சென்ற தாய்.. நடந்த நடக்ககூடாத சம்பவம்.. பேரதிர்ச்சியில் சிவகங்கை

x

சிவகங்கை நாட்டார்குடியைச் சேர்ந்தவர் சந்திரசேகர்... இவர் முருகேஸ்வரி என்ற பெண்ணை முதலில் திருமணம் செய்த நிலையில் அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது... இருவரும் கருத்து வேறுபாட்டால் பிரிந்த நிலையில், சந்திர சேகர் கோவையில் பேக்கரி ஒன்றில் வேலை பார்த்து வந்தார்,,, அப்போது அங்கு தனியார் மருத்துவமனையில் பணியாற்றிய நாகர்கோவிலைச் சேர்ந்த மஞ்சு என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு அவரை வீட்டிற்குத் தெரியாமல் 2வதாக திருமணம் செய்து கொண்டார். மஞ்சுவுக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில், வெளியில் செல்வதாகக் கூறி விட்டு குழந்தையுடன் சென்ற மஞ்சு பிறகு திரும்பவில்லை. மஞ்சுவுக்கு சந்திரசேகரும் மாமியாரும் செவ்வாயன்று போன் செய்து கேட்ட போது குழந்தை அய்யனார் கோவில் அருகே உள்ளது என கூறியுள்ளார். மறுநாள் போன் செய்த மஞ்சு குழந்தையை கோவில் செல்லும் பாதையில் சாலையின் அருகே வைத்து விட்டு வந்துள்ளதாக மாமியாரிடம் கூறியுள்ளார்... அங்கு சென்று பார்த்த போது அந்தக் குழந்தை பை ஒன்றினுள் இறந்த நிலையில் கிடந்துள்ளது... தொடர்ந்து வீட்டிற்கு எடுத்து வந்த சந்திரசேகர் குடும்பத்தார் குழந்தையைப் புதைத்துள்ளனர். இதுகுறித்து அவ்வூரைச் சேர்ந்த ஒருவர் போலீசுக்குத் தகவல் தெரிவித்த நிலையில், காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்