அதிமுக MLA-விடம் வீடு வாங்கிய பாஜக மா.தலைவருக்கு அதிர்ச்சி - கோவையில் அரங்கேறிய சம்பவம்

x

கோவை கொடிசியா அருகில் 45 புள்ளி 82 ஏக்கர் புஞ்சை நிலங்கள் தமிழ்நாடு நில சீர்திருத்தம் மற்றும் உச்ச வரம்பு சட்டத்தின்படி உபரி நிலங்களாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் கடந்த ஏழாம் தேதி இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அரசுக்கு சாதகமாக தீர்ப்பு வந்த நிலையில், இந்த நிலங்களை மீட்கக்கூடிய பணியில் கோவை வடக்கு கோட்டாட்சியர் அலுவலக அதிகாரிகள் ஈடுபட்டனர் . 229 கோடி ரூபாய் மதிப்புடைய இடங்களை வருவாய்த்துறை அதிகாரிகள் மீட்டு அந்த இடங்களில் அறிவிப்பு பலகைகளை வைத்தனர். மீட்கப்பட்ட இடத்தில் 23 வீடுகள் கட்டப்பட்டுள்ளது. அதில் ஒரு வீடு பா.ஜ.க கோவை மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமிக்கு சொந்தமான வீடு என்பது குறிப்பிடதக்கது. மேலும் அங்குள்ள 20 வீட்டு மனைகளை சிங்காநல்லூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் விற்பனை செய்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்