ஒரு வழக்கில் சொந்த ஜாமினில் சவுக்கு சங்கரை விடுவித்த நீதிபதி | savukku shankar

x

சவுக்கு சங்கர் மற்றொரு வழக்கு தொடர்பாக

திருச்சி கூடுதல் மகிளா நீதிமன்றத்தில்

மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டார்.சமூக வலைதளத்தில் பெண் காவலர்களை பற்றி தவறாக பேசிய புகார் தொடர்பாக கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கர் தற்போது சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் லதா அளித்த புகாரின் பேரில் சவுக்கு சங்கர் திருச்சி அழைத்து செல்லப்பட்டு கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர்கள் சவுக்கு சங்கர் ஏற்கனவே ஜாமின் பெற்றிருந்தாலும் இந்த வழக்கில் கைது செய்ய கோரிக்கை வைத்தனர், இந்த வழக்கில் நீதிமன்றம் காவல் வழங்க நீதிபதி ஜெயப்பிரதா அனுமதி மறுத்து சொந்த ஜாமினில் இந்த வழக்கிலிருந்து விடுவித்தார் , இதையடுத்து சவுக்கு சங்கர் சென்னை புழல் சிறைக்கு மீண்டும் அழைத்து செல்லப்பட்டார்.


Next Story

மேலும் செய்திகள்