தமிழகத்துக்கு ரூ.3.95 கோடி நிதி ஒதுக்கீடு - மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தகவல்
தமிழகத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களை தரம் உயர்த்த 3 கோடியே 95 லட்ச ரூபாயை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. நாடாளுமன்றத்தில் இதுதொடர்பான கேள்விக்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, தமிழகத்தில் 54 ஆயிரத்து 432 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வரும் நிலையில், 800 அங்கன்வாடி மையங்களை தரம் உயரத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக கூறினார். 2022-23-ஆம் நிதியாண்டில் அங்கன்வாடி மையங்களின் தரத்தை உயர்த்த தமிழகத்திற்கு 3 கோடியே 95 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
Next Story