பைத்தியம் பிடித்தது போல் மாறிய 21 வயது ரவுடி.. அஞ்சி நடுங்கிய மக்கள்
தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில், கையில் அரிவாளுடன் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த ரவுடியை போலீசார் கைது செய்தனர். சிவகங்கை மாவட்டம் பில்லூர் சித்தலூர் கிராமத்தை சேர்ந்த சந்தோஷ்குமார் என்ற 21 வயது இளைஞர் கைதான இந்த சம்பவத்தில், இளைஞர் தனியார் பேருந்து கிளீனராக பணியாற்றி வந்தது தெரியவந்தது. கையில் வீச்சரிவாளுடன் பொதுமக்களை மிரட்டி பணப்பறில் ஈடுபட்ட இளைஞர், கொலை மிரட்டலும் விடுத்ததாக கூறப்படுகிறது. இளைஞரை போலீஸ் கைது செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், அவர் கையில் வீச்சருவாளுடன் சாலையில் சுற்றித்திரிந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story