ஒரே இரவில் நான்கு வீடுகளில் கொள்ளை... சொந்தகாரர் வீட்டில் தங்கி கைவரிசை...
விஷேஷம் இல்லனா எதாவது வேலை விஷயமா சொந்தகாரங்க வீட்டுல ஸ்டே பண்றவங்கலதான் பாத்திருருப்போம் . ஆனா இங்க ஒரு குடும்பம் ஊர் ஊரா போய் சொந்தகாரங்க வீடா தேடி தேடி டேரா போட்டிருக்கு..அனா அவங்களோட நோக்கம் நாம நினைச்சி பாக்க முடியாத ஒன்னு...
நள்ளிரவில் வீடு புகுந்து கொள்ளையடிக்கும் பல சம்பவங்களை திரைப்படங்களில் நான் த்ரில்லர் காட்சியாக பார்த்திருப்போம்.
வீடு புகுந்து கொள்ளையடிப்பதில் ஒவ்வொரு கொள்ளையர்களும் தங்களுக்கென ஒரு ஸ்டைல் வைத்திருப்பார்கள். அப்படி பட்ட கொள்ளையை இங்கொரு குடும்பம் குலத்தொழிலாக செய்துவந்திருக்கிறது.
ஆம், தமிழகத்திலுள்ள பல மாவட்டங்களில் லட்ச கணக்கில் நகை பணத்தை கொள்ளையடித்த ஒரு கும்பலை தற்போது காவல்துறையினர் கூண்டோடு பிடித்திருக்கிறார்கள். அவர்களிடம் நடத்திய விசாரணையில்தான் அந்த பகீரங்க உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் பகுதி... ஒட்டுமொத்த கிராமத்தையும் அந்த ஒற்றை சம்பவம் தலைகீழாக புரட்டிபோட்டது. அதற்கு காரணம் இங்கு நடந்த கொள்ளை சம்பவங்கள்.
ஒன்றல்ல இரண்டல்ல... கிட்டதட்ட நான்கு வீடுகளில் பூட்டை உடைத்து பணம் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது.
இந்த அனைத்து கொள்ளை சம்பவங்களும் நடந்தது ஒரே இரவில். இதனால் பதறிபோன வீட்டின் உரிமையாளர்கள் மற்றும் ஊர்காரர்கள் ஒன்றிணைந்து காவல்துறைக்கு தகவல் கொடுத்திருக்கிறார்கள்.
தடயவியல் நிபுணர்களுடன் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வீடுகளை அலசி ஆராய்ந்திருக்கிறார்கள். அந்த பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் இல்லாதது காவல்துறைக்கு குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் சிக்கலை ஏற்படுத்தியது.
அப்போதுதான் நான்கு வீடுகளிலும் ஒரே பாணியில் பூட்டு உடைக்கப்பட்டிருப்பது காவல்துறைக்கு சந்தேகத்தை கிளப்பியிருக்கிறது.
ஊருக்குள் மரவேலை செய்பவர்கள் , காட்டுக்குள் மரம் வெட்டுபவர்களை பட்டியலிட்டு விசாரித்திருக்கிறார்கள்.
அப்போது தலையணை மலைப்பகுதியில் விருந்தாளியாக வந்த மூன்றுபேர் இரவோடு இரவாக மாயமானது காவல்துறையை சந்தேகமடைய செய்தது.
அவர்களின் செல்போனை ட்ரேஸ் செய்து தர்மபுரியில் வைத்து மூன்று பேரையும் கைது செய்திருக்கிறார்கள். அவர்களிடம் நடத்திய விசாரணையில் நடந்த கொள்ளை சம்பவத்தின் மர்மங்கள் விளகி உள்ளது.
கைதுச் செய்யப்பட்டவர்கள் நடராஜன் என்ற நிக்கல்சன் அவரது மனைவி லலிதா மற்றும் மகன் நவீன்குமார். இவர்களது சொந்த ஊர் தர்மபுரி மாவட்டம் அரூர் தாலுகாவிலுள்ள மலைதாங்கி கிராமம். நடராஜனும் அவரது குடும்பத்தினரும் ஆள்நடமாட்டமில்லாத வீடுகளை குறிவைத்து நகை பணத்தை கொள்ளையடிப்பதையே குலத்தொழிலாக செய்து வந்திருக்கிறார்கள்.
உறவினர்கள் வீடுகளுக்கு விருந்தாளியாக செல்லும் இவர்கள், அங்கேயே தங்கி இருந்து, அந்த ஏரியாவிலுள்ள வீடுகளை முதலில் நோட்டமிடுவார்களாம். அதில் சிசிடிவி காட்சி இல்லாத வீடுகள் ,ஆள் நடமாட்டமில்லாத வீடுகள், ஒதுக்குபுறமாக இருக்கும் வீடுகள் என தனித்தனியே பிரித்து இரவு நேரங்களில் கொள்ளைடித்து செல்வது வழக்கம்.குறிப்பாக சத்தமில்லாமல் பூட்டை உடைத்து கொள்ளைபடிப்பதில் இவர்கள் கைத்தேர்ந்தவர்களாம்.
இப்படிதான் வாசுதேவநல்லூர் கிராமத்திலுள்ள தொழிலதிபர் வீட்டில் மொத்தம் அறுபது லட்சம் மதிப்புள்ள 102 சவரன் தங்கநகைகளை இவர்கள் கொள்ளையடித்துச் சென்றது விசாரனையில் வெளிவந்திருக்கிறது.
தற்போது காவல்துறையினர் அவர்களிடம் இருந்து 9 லட்சம் மதிப்புள்ள நகைகளை மீட்டிருக்கிறார்கள்.
இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக நடராஜன் மற்றும் அவரது குடும்பத்தினரை கைது செய்த போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முழுமையான விசாரணைக்கு பிறகே கொள்ளையடிக்கப்பட்ட அனைத்து நகைகளும் மீட்கப்படும்.