கனமழையால் கடலாக மாறிய சாலை..மழைநீரில் ஆமை போல..ஊர்ந்து சென்ற வாகனங்கள் | Tamilnadu | Rains
திண்டுக்கல்லில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக பெய்த கன மழையால், சாலைகளில் தண்ணீர் தேங்கியது. திண்டுக்கல் ஆர் எம் காலனி பிரதான சாலையில் மழைநீர் வடிய வழியில்லாததால் குளம் போன்று காட்சியளித்தது. வாகனங்கள் மழைநீரில் ஊர்ந்து சென்றன. அருகிலுள்ள குடியிருப்பு பகுதிகளையும் மழைநீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் மழைநீரில் இறங்கி செல்லும் அவல நிலை ஏற்பட்டது. முறையான வடிகால் வசதி ஏற்படுத்தித்தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சுற்று வட்டார பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்தது. நத்தம், சேர்வீடு, கோவில்பட்டி, மெய்யம்பட்டி, சமுத்திராப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது. சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதுடன், வடிகால் கால்வாய்கள் நிர்ம்பி வழிந்தன. வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் நிம்மதியடைந்தனர்.