நீர்பிடிப்பு பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்..ஊராட்சிமன்ற துணைத்தலைவர் மீது தாக்குதல்..| Cuddalore

x

பண்ருட்டி ஒன்றியம், வேகாகொல்லை ஊராட்சியில், நீர்பிடிப்பு பகுதியில் இருந்த ஆக்கிரமிப்புகள், மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவுப்படி அகற்றப்பட்டது. இதற்கு ஊராட்சி மன்றத் துணைத்தலைவர் தட்சிணாமூர்த்தி தான் காரணம் எனக்கூறி, ஆக்கிரமிப்பில் ஈடுபட்ட விஸ்வநாதன் என்பவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த தட்சிணாமூர்த்தி, காடாம்புலியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் மீது விசாரணை நடைபெறும் என தகவல் வெளியானதால் ஆத்திரமடைந்த விஸ்வநாதன் மற்றும் சிலர், தட்சிணாமூர்த்தி வீட்டிற்கே சென்று தாக்குதல் நடத்தி, பொருட்களை அடித்து உடைத்துள்ளார். இதில் காயமடைந்த தட்சிணாமூர்த்தி, அவரது மனைவி உட்பட மூவர், கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளன​ர். சம்பவம் குறித்து காடாம்புலியூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்